
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கிடையில், ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் பொதுமக்கள் அனுபவங்களைப் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக, ஒரு நபரின் நகைச்சுவையான பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தைக் குறித்துப் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் போது, அந்த நபருடன் நடந்த உரையாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தியாளர், “நிலநடுக்கம் உணர்ந்தீர்களா? எங்கு இருந்தீர்கள்?” என்று கேட்க, அவர் “ஆமாம், நான் ஒரு டாக்ஸியில் பயணம் செய்து கொண்டிருந்தேன், அப்போது எனது மனைவி என்னை அழைத்தாள்” என பதிலளித்தார். ஆனால், இது நிலநடுக்கத்தைப் பற்றிய பதிலாக இருந்ததில்லை – “மனைவியின் அழைப்பே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்று நகைச்சுவையாக கூறினார். இதை கேட்ட செய்தியாளர் உடனே சிரிப்பை அடக்க முடியாமல் கலகலவென சிரித்தார்.
இந்த வீடியோ ‘Ghar Ke Kalesh’ என்ற X பக்கம் பகிர்ந்ததையடுத்து, பலரும் “நிலநடுக்கத்திலிருந்து தப்பிக்கலாம், ஆனால் மனைவியின் அழைப்பிலிருந்து எப்படி?”, “சத்தியமா, இது தான் உண்மையான பூகம்பம்!” என நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். அதிகாலையில் நிலநடுக்கம் இருந்தது தெரியாமல் இருந்தவர்களும், இந்த வீடியோவால் சிரிக்க நேர்ந்தது! என்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.