
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மனைவி மரிய சந்தியாவை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் கன்னியாகுமரி அஞ்சு கிராமத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு குடியேறியுள்ளார். மேலும் இவர் ஆடு வெட்டும் தொழில் செய்து வந்ததோடு கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவருக்கு மரிய சந்தியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் மாரிமுத்து தனது மனைவி மரியா சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து தெளிவாக திட்டமிட்டு அவரை வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில் மாரிமுத்து மரிய சந்தியாவை வெட்டி கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது வெட்டும் போது மரிய சந்தியாவின் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக டி.வி சத்தத்தையும் அதிகமாக வைத்துள்ளார். பின்னர் ஆட்டை அறுப்பது போல மனைவியின் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். பின்னர் அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை ஒரு பையனும் மற்ற உடல் பாகங்களை 2 வேறு வேறு பைகளிலும் அடைத்துள்ளார்.
பின்னர் அதனை ஒரு பேக்குக்குள் வைத்து இழுத்து சென்ற போது நாய் அவரை விடாமல் துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நாய் வாயால் பேக்கை கடித்து இழுத்த போது அக்கம் பக்கத்தினர் பார்த்து பேக்கில் என்ன என்று மாரிமுத்துவிடம் கேட்ட போது அது மாட்டு இறைச்சி என்று கூறி திசை திருப்ப முயன்றுள்ளார். இதனை நம்பாத பொதுமக்கள் பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மரிய சந்தியாவின் உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்ததோடு மரிய சந்தியாவின் உடல் பாகங்களை மீட்டு உடல் கூறு பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.