மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காமராஜ் புனிதாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதோடு வீட்டை பூட்டி கொண்டு புனிதா வெளியே வராமல் இருந்ததால் கோபத்தில் காமராஜ் புனிதாவின் பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் அந்த மூதாட்டிக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவருடைய உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காமராஜை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.