கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் பழனிச்சாமி தனது மனைவியின் நினைவாக அவரை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து, உருவச்சிலையை நிறுவி தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

இதுகுறித்து பழனிச்சாமி கூறியதாவது, திருமணமான நாள் முதல் நானும் எனது மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அவர் என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவாக மண்டபம் அமைத்து உருவாச்சிலேயே வைத்து வழிபட்டு வருகிறேன். மனைவி இறந்த பிறகு நினைவுகளுடன் வாழ்வதைவிட மனைவி இருக்கும் போதே உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.