கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக ஒரு வாகனம் வந்ததால் யானை பயந்து போய் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் மருதமலை வனப்பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை நேற்று இரவு நேரத்தில் வடவள்ளி, நவாவூர் ஆகிய பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்த நிலையில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது நாய் ஒன்று அதனைப் பார்த்து குரைத்தது. மேலும் அந்த நாயை யானை விரட்டி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.