
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண் சமுதாயம் இருக்கிறதே! சாதாரணமாக உங்கள் வீட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கணவனிடம் கேள்வி எழுப்பும் போது, அதற்கு அவர்கள் சும்மா இருக்கிறார்கள், நான் தான் வேலைக்கு போகிறேன் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன சும்மாவா வீட்டில் இருக்கிறார்கள்?. எந்தப் பெண்ணும் வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு வீட்டில் முதலாவதாக எழுந்து கணவன் மற்றும் குழந்தைகளுக்கு டிபன் செய்ய வேண்டும்.
அதன் பின் அவர்களை பள்ளிகள் மட்டும் அலுவலகத்திற்கு புறப்பட வைக்க வேண்டும். அதோட அவர்களுக்கு மதிய உணவும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. இதைத்தொடர்ந்து மாலையில் குழந்தைகள் வருவார்கள் என்று அவர்களுக்கு பலகாரம் செய்து வைப்பது, அவர்களைப் படிக்க வைப்பது, அதன் பின் அவர்களுக்கு இரவு உணவு செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். அதனால் அவர்கள் வீட்டில் சும்மா இருக்கவில்லை, ஆண்களை விட அதிகமாக வேலை செய்கின்றனர். பெண்களை வேலைக்கு அனுப்பி விட்டு ஆண்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்வார்களா? என்று அவர் பேசினார்.