சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.

அப்போது அந்த குழந்தை இருசக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை தெரியாமல் திருகி உள்ளது. இதனால் வண்டி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அந்த 4 வயது குழந்தையின் உயிர் பரிதாபமாக போனது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.