திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் நடு மையம் ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பாலத்தை மக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.