தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு முறையான பதில் அளித்தால்தான் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படுமாம். இதன் காரணமாக திட்டமிட்டபடி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறாது என்று  தகவல்கள் பரவியது.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்‌. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் பிறகு காவல் துறையினர் கேட்டிருந்த கேள்விக்கு கட்சியின் சட்ட பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.