பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக படம் ஆக்கியுள்ளார். முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாம் பாகம் வருமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொன்ன ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் குறித்த கேள்விக்கு மட்டும் டாட்டா காண்பித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் கண்டிப்பாக வரும். ஆனால் அதை யார் இயக்குவார் என்று தெரியாது என்று கூறியிருந்தார். இதனால் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வராது என்பது திட்டவட்டமாக தெரிந்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.