
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
வாழ்த்துக்கள். 18 வயது நிரம்பிய யாரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியலுக்கு வரலாம். அரசியல் மூலமா மக்கள் பணியாற்றுறேன் அப்படின்னு அவர் விரும்பினால் வரவேற்கிறோம். அவர் கட்சி, கொள்கை, பல அரசியல் பிரச்சினையில் அவர் எடுக்கும் நிலைப்பாடுகள் எடுக்கும் போது தான் நாம விமர்சிக்க முடியும். இப்போ அரசியலுக்கு வரேன்னு என்று சொல்லுவதை வரவேற்போம், வாழ்த்துவோம் என பேசினார்.
விஜய் அடுத்த MGRஆக வருவாரா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
பாருங்க அனாவசியமா… இந்த நடிகர் வந்தார் எம்ஜிஆர் ஆனாரா ? இந்த நடிகர் வந்தார், எம்ஜிஆர் ஆனாரா என்றெல்லாம் நான் ஏதாவது சொல்லி… அதுக்கப்புறம் அது ரொம்ப வைரல் ஆகிப்போச்சு அப்படின்னா.. வேண்டாம். அதனால அரசியலுக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. இப்போ டெஸ்ட் ஆகும்.
அவர் தேர்தலில் போட்டியிடும் போது தான் டெஸ்ட் ஆகும். அப்ப பார்த்துப்போம், அதனால்தான் நான் சொன்னேன்… அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் ஒரு கருத்து சொல்லும் போது தான் நாம் அது சரியா ? தவறா ? என்று சொல்ல முடியும். அதுவரை நாம் வாழ்த்துக்களோடு நிறுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.