தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சென்னையில் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மூர்த்தியுடன் சேர்ந்து பார்வையிட்டார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் நீங்கள் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படத்தை எடுத்தால் அதில் ஹீரோவாக நடிப்பீர்களா என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் சேதுபதி ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

முதல்வர் ஸ்டாலின் 70 வருட புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நம்மை ஆண்டவர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இதை பார்க்கும் போதே முதல்வர் ஸ்டாலின் வாரிசு அடிப்படையில் வந்தவர் கிடையாது என்பதும் அவரின் கடின உழைப்பும் நன்றாக புரியும். முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் தற்போதைக்கு எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது என்றும், நான் ஒரு நடிகராக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன் என்றும் கூறினார்.