தமிழக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சமீபத்தில் இணையதளம் ஒன்றில் திமுக அரசு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பாட்டாளி மக்கள் கட்சி அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஒரே கட்சியாகும். அண்ணல் அம்பேத்கரின் சிலையை எங்களது வீட்டின் வளாகத்தில் அமைத்துள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட அண்ணல் அம்பேத்கரின் சிலையை திறந்து உள்ளோம்.

ஆனால் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் காக இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இன்று வரை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்படவில்லை. திமுக ஆட்சி 2021 இல் இருந்து பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 40க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயரை மட்டுமே சூட்டி உள்ளது. மேலும் அவர்களது தாயார் பெயரையும் சில நலத்திட்டங்களுக்கு சூட்டியுள்ளனர்.

இதுவரை எந்த ஒரு புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை. பெயரளவில் மட்டுமே அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளைப் பாதுகாக்க பிறந்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். தற்போது சென்னை கிண்டி மருத்துவமனை கீழாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மற்றும் அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரையே சூட்ட வேண்டும். இதனை திமுக அரசு ஏற்ற செயல்படுமா? என்ன கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.