
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று, முழு ஊரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரோஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 19 வயது பெண், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திருமணமான பிறகு, இரண்டாவது நாளே திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார்.
இதையடுத்து, மணமகன் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் இல்லாததால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மணப்பெண் பாலி அருகே உள்ள ஒரு பகுதியில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, மணப்பெண்ணை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த ஒருவர், பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்ததையும், திருமணத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்ததையும் விசாரணையில் போலீசார் உறுதிப்படுத்தினர்.
தற்போது, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தலைமறைவான நிலையில், போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், புதிதாக திருமணம் முடித்த மணமகனும் அவரது குடும்பத்தினரும் பெரும் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர்.