
டெல்லியில் டேட்டிங் ஆப்களில் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் அங்கித் சிங்(33)என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய தந்தை சாலை விபத்தில் இறந்த நிலையில் நிலையில், தாய் கோவிட் நோயால் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவர் தன்னுடைய சகோதரியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியாக பணிபுரிகிறேன் எனக்கூறி பல பெண்களிடம் இவர் மோசடி செய்து வந்துள்ளார். அதன்படி 6 மாத காலத்தில் ரூ. 38 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். தற்போது மேற்கு டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திலிருந்து வெளிவந்த நேரத்தில் டேட்டிங் ஆப் மூலம் இவரிடம் பேச தொடங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் காதலை வளர்த்த அங்கித் போக போக அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்துள்ளார்.
அதன்படி மார்ச் மாதத்திற்குள் ரூ 9.5 லட்சம் பணத்தை அந்த பெண் ஒருவரிடம் இருந்து மட்டுமே மோசடி செய்துள்ளார். அந்தப் பெண் பணத்தை திருப்பி கேட்ட நிலையில் அவர் பல காரணங்களை கூறி மறுத்ததால் சந்தேகமடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் கடந்த மார்ச் 17ஆம் தேதி அங்கீத்தை கைது செய்தனர். அதன்பின் அவரது வங்கி கணக்கையும், whatsapp எண்ணையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதில் 410 க்கும் மேற்பட்ட whatsapp உரையாடல்கள் இருப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 4 மொபைல் எண்களை பயன்படுத்தி பணமோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பல பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுத்தியதாகவும், திருமணம் உறவு தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.