அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் னிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் 33 வயதான இவருக்கு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேனன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஓனிஜா தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஆனால் மேனனின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டனர். ஆகவே காதலனை கரம் பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்து அமெரிக்கா செல்ல மனம் இல்லாமல் இருந்துள்ளார்.

மாறாக பாகிஸ்தானிலேயே இருக்கப் போவதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானை புனரமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக எனக்கு அரசாங்கம் ரூபாய் 1 லட்சம் டாலர் அதாவது இந்தியா மதிப்பில் ரூபாய் 87.30 லட்சம் வழங்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தர வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இங்குள்ள தெருக்கல் எனக்கு பிடிக்கவில்லை, அதனை சரி செய்ய வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு புதிய பஸ்கள், டாக்ஸிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.