
2023 ஒருநாள் உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது..
2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
மேலும் அனைத்து அணிகளும் முன்கூட்டியே தங்கள் வீரர்களை அறிவித்துள்ளன. நேற்று அனைத்து அணிகளுக்கும் இறுதி செய்ய கடைசி நாளாக (செப்டம்பர் 28ஆம் தேதி) ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். அதேபோல ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்தனர்.
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை அக்டோபர் 8 முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும். இந்த தொடரில் அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே உலகக் கோப்பையில் பயிற்சிப் போட்டிகளின் அட்டவணையின்படி, இந்த முறை அனைத்து அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. பயிற்சி ஆட்டங்கள் கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் நடைபெற உள்ளன.
பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை :
செப்டம்பர் 29, 2023 – வெள்ளிக்கிழமை (3 போட்டிகள்)
பங்களாதேஷ் Vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
தென்னாப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான், கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
நியூசிலாந்து Vs பாகிஸ்தான், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
செப்டம்பர் 30, 2023 – சனிக்கிழமை :
இந்தியா vs இங்கிலாந்து, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
ஆஸ்திரேலியா Vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
அக்டோபர் 2, 2023 – திங்கட்கிழமை :
இங்கிலாந்து Vs பங்களாதேஷ், பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
அக்டோபர் 3, 2023 – செவ்வாய்க் கிழமை :
ஆப்கானிஸ்தான் Vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
இந்தியா Vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
பயிற்சி ஆட்டங்களின் நேரம் :
மதியம் 2 மணி முதல் அனைத்து பயிற்சி ஆட்டங்களும் நடைபெறும்.
போட்டியின் நேரடி ஒளிபரப்பு :
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கையாளுதல்களில் உள்ள இடுகைகளின்படி, போட்டிகளின் கவரேஜ் 12:30 PM IST இல் தொடங்கும். வார்ம்-அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் 2 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும் உலகக் கோப்பை 2023 வார்ம்-அப் போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். இருப்பினும், ஒரே நேரத்தில் பல போட்டிகள் நடக்கும் என்பதால் எந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.
#CWC23 action is upon us and we begin with these warm-up matches on Day 1 🤩
Tune-in to #NZvPAK, #BANvSL & #SAvAFG Warm-up Matches in #WorldCupOnStar
FRI, SEP 29, 12:30 PM onwards | Star Sports Network#Cricket pic.twitter.com/6IZSVqyJ9h— Star Sports (@StarSportsIndia) September 28, 2023