
அயர்லாந்தின் கன்சன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைப் என்ற அமைப்புகள் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை உலகில் 19ஆவது பட்டினி குறியீட்டு ஆய்வுஅறிக்கை ஆகும். இதில் நடப்பாண்டில் நடைபெற்ற ஆய்வில் 127 நாடுகள் கணக்கிடப்பட்டுள்ளன, இதில் இந்தியாவிற்கு 105வது இடம். இதன் பெயரில் தீவிரமான பசி, பட்டினி உள்ள நாடாக இந்தியா வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இந்தியாவில் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் காணப்படுகின்றனர் எனவும்,35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர் எனவும்,2.9% குழந்தைகள் 2 வயதிற்குட்பட்ட இறப்பு விகிதம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 13.7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு விகிதமாகும். இதற்கு முன்னர் இதேபோன்று வந்த ஆய்வறிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியா பசி பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.