
போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பணக்காரர்கள் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கௌதம் அதானி 22 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம் அதானி குடும்பத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வுப் புகாரே ஆகும் என கூறப்படுகிறது. இந்த புகாரை அடுத்து அதானி குடும்ப பங்குகள் வேகமாக சரிவை சந்தித்து வருகின்றது. இதனாலேயே இரண்டாவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் 1 வது இடத்தையும், 2 வது இடத்தை எல்லாம் மஸ்க், 12 வது இடத்தில் முகேஷ் அம்பானியும் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். இதனால் தற்போது ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற பெயரை இந்தியாவின் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.