உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து பாராட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளின் உலகளாவிய கொண்டாட்டம்தான் உலக ஆசிரியர் தினம். ஆசிரியர்கள் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலக ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பல நாடுகள் ஆசிரியர் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. அது குறித்து இதில் பார்க்கலாம்.

லக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் அதே வேளையில், பல நாடுகள் ஆசிரியர் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. சில பொதுவான தேதிகளின் பட்டியல் இங்கே:

நாடு தேதிகள்
அர்ஜென்டினா 11 செப்டம்பர் 
பங்களாதேஷ் 5 அக்டோபர் 
பிரேசில் 15 அக்டோபர் 
சீனா 10 செப்டம்பர் 
ஜெர்மனி 5 அக்டோபர்
இந்தியா 5 செப்டம்பர்
ஈரான்  2 மே
ஜப்பான் 5 அக்டோபர்
மெக்சிகோ 15 மே 
தென் கொரியா 15 மே 
ரஷ்யா 5 அக்டோபர் 
தாய்லாந்து 16 ஜனவரி
ஐக்கிய அரபு நாடுகள் 5 அக்டோபர்
ஐக்கிய இராச்சியம் 5 அக்டோபர்
அமெரிக்கா மே முதல் முழு வாரத்தில் நடக்கும் ஆசிரியர் பாராட்டு வாரத்தின் போது செவ்வாய் கிழமை.