
2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தனக்குப் பிடித்தமான இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தனக்கு பிடித்த 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். சில நட்சத்திர வீரர்களை மாற்றாமல் சில ஆச்சரியமான பெயர்களை தனது அணியில் வைத்துள்ளார். ஹைடன் தனது அணியில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரையும் விக்கெட் கீப்பிங் விருப்பங்களாக சேர்த்துள்ளார். இருப்பினும் குல்தீப், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.
இந்த அணியில் சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரையும் ஹைடன் தேர்வு செய்துள்ளார். கேஎல் ராகுலை சிறப்பு பேட்ஸ்மேனாக ஹைடன் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த அணியில் குல்தீப் யாதவ் மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெறவில்லை.
மேத்யூ ஹைடன் அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முக்கிய பேட்ஸ்மேன்களாகவும், கிஷன் மற்றும் சாம்சன் விக்கெட் கீப்பர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், பந்துவீச்சில், ஜடேஜா மற்றும் அக்ஷரை சுழற்பந்து வீச்சாளர்களாகவும், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் ஹைடன் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்-ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலை தேர்வு செய்யாதது குறித்து ஹைடன் தனது கருத்தை தெரிவித்திருந்தார். ஹேடன் மேலும் கூறுகையில், “சில பெரிய பெயர்கள் இன்னும் அணியில் இல்லை. குறிப்பாக சாஹல், அவர் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர், இது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினம். பிசிசிஐக்கு குல்தீப் யாதவில் சாஹல் போன்ற மற்றொரு வீரர் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த வீரர். எனவே அவர்கள் அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார்.
இந்திய அணி தனது உலகக் கோப்பை பயணத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா பெரிதும் எதிர்பார்க்கும் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான மேத்யூ ஹைடனின் 15 பேர் கொண்ட இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் மற்றும் அக்ஷர் படேல்.
A champion’s touch!
![]()
Former Aussie WC winner, @HaydosTweets has unveiled his #TeamIndia squad for the #CWC2023!
Would you make any changes to this dream team?
Tune-in to the #WorldCupOnStar
October 5, 2 PM onwards | Star Sports Network & Disney+ Hotstar#Cricket pic.twitter.com/lAxvbPJLgi— Star Sports (@StarSportsIndia) August 26, 2023