
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரை இறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குயின்டன் டி காக் – 3, தேம்பா பாவுமா – 0, ராஸ்ஸி வான் டெர் டுசென் – 6, ஐடன் மார்க்ராம் – 10, ஹென்ரிச் கிளாசென் – 47, டேவிட் மில்லர் – 101, மார்கோ ஜான்சன் – 0, ஜெரால்ட் கோட்ஸி – 19 , கேசவ் மகாராஜ் – 4, ககிசோ ரபாடா – 10, தப்ரைஸ் ஷம்சி – 1* என 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் எடுத்து.
இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் – 62 , டேவிட் வார்னர் – 29 , மிட்ச் மார்ஷ் – 0 , ஸ்டீவ் ஸ்மித் – 30 , மார்னஸ் லாபுசாக்னே – 18 , கிளென் மேக்ஸ்வெல் – 1 , ஜோஷ் இங்கிலிஸ் – 28 , மிட்செல் ஸ்டார்க் – 16* , பாட் கம்மின்ஸ் – 9* ஆடம் ஜம்பா – , ஜோஷ் ஹேசில்வுட் – எடுக்க அந்த அணி 48. ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி வருகின்ற 19ஆம் தேதி இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கின்றது.