தமிழ் சினிமாவில்  பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. கடந்த 2002 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் கால் வைத்த இவர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் தற்காப்பு கலை கற்றுக்கொண்டு வருகிறார். அதாவது கர்லாகட்டை சுற்றுதல் உள்ளிட்ட தற்காப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.