பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் உலகமே வியக்கும் வகையில் நடைபெற்றது. இந்த திருமண விழா, அதன் பின் நடந்த சடங்குகள் என அனைத்தும் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்த நிலையில் ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில் இந்த தம்பதியினர் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் ஆனந்த அம்பானி அணிந்திருந்த வாட்ச் பலரும் தேடும் பொருளாக மாறி உள்ளது. இந்த வாட்சின் வடிவமைப்பு “Richard Mille RM 52-04 skull blue shaphire” வாட்ச். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 22 கோடி ஆகும். மேலும் இந்த அரிய வகை வாட்ச் இதுவரை உலகிலேயே 3 மட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் இன் உள் வடிவமைப்பு கடற்கொள்ளையரின் மண்டை ஓடு, வெளிப்புறத்தில் குறுக்கு வடிவிலான எலும்புகளை கொண்டுள்ளது. இதன் விலையை கேட்டு இணையவாசிகள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த வாட்சின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.