
கர்நாடகாவில் வீடுகளில் வேலை செய்வதற்காக பணிப்பெண்களுக்கு பதிலாக தற்போது ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மனிஷா ராய் (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது சமையல்காரருக்கு பதிலாக சமையலறை ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்த ரோபோ வந்ததிலிருந்து எனது கணவர் மற்றும் 2 1/2 வயது மகள், ரோபோ தயாரித்த உணவை சாப்பிடுகிறார்கள். இந்த ரோபோ நறுக்கவும், வதக்கவும், வறுக்கவும், கிளறவும், ஆவியில் வேக வைக்கவும் செய்கிறது. நான் செல்போனை பயன்படுத்தி ரோபோவை இயக்குகின்றேன்.
இந்த ரோபோ காய்கறிகளை வெட்டும்போதோ அல்லது வறுக்கும் போதோ நான் பக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோன்று பெங்களூரை சேர்ந்த கட்டிட கலைஞர் மீரா வாசுதேவ் என்ற பெண் 2 விதமான ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார். நீங்கள் ஒரு துடைப்பத்தை பயன்படுத்தும் போது குனிய தேவை இல்லை.
ஒரு துடைப்பதால் எடுக்க முடியாத சிறிய தூசியைக் கூட ரோபோக்கள் எடுத்துக் கொள்கின்றனர். இதேபோன்று கோரமங்களாவை சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் தரையை சுத்தம் செய்யும் ரோபோவை பயன்படுத்தி வருகிறார்.
நான் வீட்டின் உதவியாளருக்கு மாதம் 2500 சம்பளம் கொடுத்தேன். ஆனால் இப்போது நிறைய பணத்தை சேமித்து வருகிறேன் என்று கூறினார். இதைத் தவிர, விமான நிலையங்களில் அங்கு பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் 10 ரோபோக்கள் கடந்த ஆண்டு முதல் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதேப் போன்று பெங்களூரில் உள்ள ஹோட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியாவில் பெங்களூரில் தான் அதிக அளவில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.