
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்.
இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் கட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினார்கள்.
View this post on Instagram
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இந்தூர் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட இந்த புதுமையான முயற்சியில், மக்கள் சிவப்பு விளக்கின் போது வாகனங்களை நிறுத்தி, ரோட்டை கடக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்காக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.
விமானப் பணிப்பெணின் விளக்கமான அறிவுறுத்தல் வாகன ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்த்தது. போக்குவரத்து விதிகளை சீராகக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு புதிய பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த முயற்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.