கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரமிளா என்ற பெண் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். கடலூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும் ராங் கால் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரமிளா 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அன்பழகன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரமிளா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.