
தமிழ் சினிமாவில் கார்த்தியின் ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகிய ராஷ்மிகா மந்தனா, பின் வாரிசு படத்தில் தளபதியுடன் சேர்ந்து நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து உள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது, “மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அழகுக்கு உதாரணமாக யாரையும் கூறமுடியாது.
அனைவரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்கிறது. சிலர் பருமனாக இருந்தால் தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்களின் உடலின் வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு 6 மாதம் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். என்னை பொறுத்தவரையிலும் நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து உள்ளேன். அவர் வாயிலாக என் கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றி வருகிறேன்” என்று கூறினார்.