
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மிகச் சிறப்பாக ஆன்மீக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்கிறார் நம்ம ஐயா திருவாவடுதுறை ஆதீனம். அது எந்த ஆன்மீகம் ? கிருத்துவ ஆன்மீகமா ? இஸ்லாமிய ஆன்மீகமா ? இந்து ஆன்மீகமா ? ஏதோ ஒன்னு… ஆடு அறுக்கறவனையே நம்புற மாதிரி, என் மக்கள் இவங்களையே நம்பிட்டு கிடக்கிறாங்க.
நானும் எவ்வளவு கத்தி பாத்துட்டேன். சிறுபான்மை என சொல்ல கூடாதுன்னுட்டாரு… உண்மையிலேயே நீங்க புரிந்து நடிக்கிறீங்களா…? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா… நான் கூட சொல்வேன்…. என் தம்பி எல்லாம் கேப்பாங்க… தம்பி அறியாமையில் இருக்கிறவனுக்கு கற்பிக்கலாம், போதிக்கலாம், பொறாமையில் இருக்கிறவனுக்கு போதிக்க முடியாது. அவனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. ஏறினாலும் ஏறாத மாதிரி விடுங்க…
சிறுபான்மை விடுங்க…. சிறுபான்மை என சொல்லாதீங்க என சொல்லுவாங்க. டேய் பைத்தியக்கார பயலே.. அரசியல் சாசனத்தில் இருக்குது. அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தில் இருக்குது. 75 ஆண்டு ஆயிடுச்சு இல்லடா… விடுதலை பெற்று. எத்தனை பிரதமரா ? இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் சொல்டா ? ஏய்… சிறுபான்மை மக்களுக்கு நீங்க கொடுத்த முன்னுரிமை, பின்னுரிமையா இங்கு வாடா.. எத்தனை பேரை வச்சிருக்க.
ஒண்ணுத்துக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப்பாக வச்சிருப்பான். நீட்டுன நேரத்தில… காட்டுன இடத்துல கையெழுத்து. டாக்டர் ஜாகிர் உசேன் வச்ச, அப்புறம் எங்க ஐயா அப்துல் கலாம் வச்ச. ஏன் ஒரு தடவை பிரதமர் ஆக்கேன். இவ்வளவுதான் இவன் சிறுபான்மைக்கு புடுங்கன புடுங்கு இருக்குல்ல, இவ்வளவுதான் என தெரிவித்தார்.