
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் இந்த இனத்தில் பிறந்திட்டேன். என் பிறவி கடன் இது. என் அண்ணனும் இந்த இனத்தில் பிறந்துட்டான். இந்த இனத்தில் அவன் பிறவி கடன் செஞ்சுட்டான். தம்பி செய்யத் துடிக்கிறேன். வந்தா வா… வரலனா போ. போராடினாலும் சாவ… போராடலனாலும் சாவ.. போராடினால் ஒருவர் வாழ வாய்ப்பு இருக்கு, போராடி சாவோம் வா. ஏற்கனவே செத்துட்ட நீ. பாதிக்கு மேல செத்துட்ட…
நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம்!
நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிடோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!
முரசும் கொட்டியச்சி. போர் தொடங்கியாச்சு. பயணம் தொடங்கி நான் பல நாட்கள் ஆச்சு. 2026இல் எண்ணி முடிச்சு வெற்றி என்கிற அந்த முழக்கச் சொல்லை கேட்ட பிறகுதான் இந்தப் பயணம் நீக்கும். வருறவன் வா.. வராதவன் போ…. எப்பவும் போல விலகி நின்னு வேடிக்கை பாரு.
குறுக்க மறுக்க ஓடாத. இன விடுதலை என்கிற பெரும் பசி. லட்சிய பசிக்கொண்டு வெறியோடு பாய்கிற புலிகளுக்கு முன்பு, பூனையும், எலியும், நாயும், நரியும் குறுக்க குறுக்க ஓட கூடாது. எவன் வந்தாலும் ஒரே அடித்தான். குறுக்க வராத போயிடு. என் இலக்குக்கு எதிராக என்னைப் பெற்ற தாய், தந்தையே வந்தாலும் எனக்கு எதிரி தான். அதுல மாமா, மச்சான், அண்ணன், தம்பிலாம் எந்த பக்கம் என தெரிவவித்தார்.