அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழுமம் மீது லஞ்ச குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிய வந்த ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, அதானி கைது செய்யப்பட வேண்டும். அவரை மத்திய அரசு தொடர்ந்து பாதுகாக்கிறது. சிறு சிறு குற்றங்களுக்காக பலரும் தண்டனை அனுபவிக்கும் பொழுது அதானி மட்டும் எதற்காக வெளியே இருக்க வேண்டும்? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் அமெரிக்க லஞ்சுக்குற்றவியல் புகாரில் அதானி மற்றும் அவரது குழுமம் பெயர் இடம் பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும் அதானி குழுமம் லஞ்ச குற்றம் சாட்டப்பட்டது மறுக்கப்படுகிறது. அதானி இதனை ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறீர்கள்?.. ஆனால் அவர் வெளிப்படையாகவே குற்றங்களை மறுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.