தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டவும், எடுத்துச் சொல்லவும் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க மலைத்தளம் என்று இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தனியார் நிலங்களில் தேக்கு, சந்தனம், செம்மரம் போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

அதன்படி தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பவர்கள், அவற்றை வெட்ட, வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் மலைத்தளம் என்ற இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து முடிவெடுக்கும்.