தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதோடு மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சுமார் 10 எம்எல்ஏக்கள் பி ஆர் எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், இவர்கள் சேலை மற்றும் வளையல்களை அணிய வேண்டும் என பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ கௌசிக் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அவர் கையில் புடவையை வைத்துக்கொண்டு இப்படி கூறினார்.

அவர் அந்த ‌ எம்எல்ஏக்களின் பெயர்களை குறிப்பிட்டு நீங்கள் ஆண்களே கிடையாது. இ  தை அணிந்து கொள்ளுங்கள் என்றார். இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் பந்த்ரு ‌ சோபா ராணி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது மீடியாக்கள் முன்னிலையில் அவர் தன்னுடைய ஷூவை காண்பித்தார். நீங்கள் வளையல் சேலையை காண்பித்தீர்கள். அதனால்தான் நான் உங்களுக்கு ஷூவை காண்பிக்கிறேன். நீங்கள் பெண்களை இழிவு படுத்தினால் உங்களை செருப்பால் அடிப்போம் என்று கூறினார். மேலும் தேர்தலுக்குப் பிறகு விலகிய 10 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆர்எஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.