
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் முதலில் மாடலாக இருந்தார், அதன் பின்னர் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் மாடலாக இருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் 2-ம் இடத்தைப் பெற்றார். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் முதன் முதலில் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். அங்கு அவருக்கு அதிக சம்பளம் கொடுத்ததோடு, NO.1 நடிகையாக வளம் வந்தார். அதன் பிறகு மீண்டும் தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பூஜா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பருமனாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.