தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இதுவரை 41 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தன் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் பிள்ளைகளின் படிப்புக்காக நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த நாளிலிருந்து ஜோதிகா அவருடைய சொல்படி தான் நடந்து வருகிறார். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா கடந்த 2015-ம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜோதிகாவிடம் சூர்யா தனுஷுடன் மட்டும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி படத்தில் முதலில் ஜோதிகா தான் ஹீரோயினாக கமிட் ஆனாராம். ஆனால் சூர்யா தனுஷ் உடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று கூறியதால் அந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகி விட்டாராம். அதன் பிறகு தான் நயன்தாரா யாரடி நீ மோகினி திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் தனுஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என சூர்யா எதற்காக சொன்னார் என்ற காரணம் வெளிவரவில்லை.