தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (32) என்பவரும் வேலை பார்த்துள்ளார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது. இந்நிலையில் ராஜாவுக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து சரண்யா வீட்டை விட்டு வெளியேறி ராஜாவுடன் 3 மாதங்களுக்கு முன்பு அம்பத்தூரில் குடியேறினார்.

இதையடுத்து சரண்யா அதே பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில் பராமரிப்பு வேலை பார்த்து வந்ததோடு, ராஜா வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சரண்யா அவருடைய கணவருடன் போனில் பேசியுள்ளார். ஆனால் அது ராஜாவுக்கு பிடிக்காததால் அடிக்கடி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பினர். அவர்கள் இரண்டு பேரும் அங்குள்ள பாழடைந்த டன்லப் தொழிற்சாலை வழியாக சென்றுள்ளனர். இருவரும் மது அருந்துவதற்காக அந்த தொழிற்சாலைக்குள் சென்று மது அருந்தி இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது ராஜா சரண்யாவிடம் உன்னுடைய கணவருடன் நீ பேசக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் தாக்கினார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு ராஜா அவரது உடலை துணியால் சுற்றி அங்கு இருந்த அறைக்குள் வீசினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்த ராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.