ஆப்கானிஸ்தானில் கடந்த 2001 இல் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தலிப்பான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்த நிலையில் தலிப்பான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள், கல்வி, வேலை, பேச்சு, சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்கள் உள்ள வீடுகளில் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலிப்பான் அரசு தரப்பில் செய்தி தொடர்பாளர் முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் உள்ள வீட்டின் சமையலறை, முற்றம், கிணற்றுப் பகுதி ஆகிய இடங்களில் ஜன்னல்கள் இடம்பெறக்கூடாது.

பெண்கள் வீடுகளில் சமையலறை கிணற்றுப் பகுதிகளில் பார்ப்பது மிகவும் குற்றமான செயலாகும். இதனை தவிர்ப்பதற்காக புதிதாக கட்டப்படும் வீடுகளில் இந்தப் பகுதிகளில் ஜன்னல்கள் வைக்க கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை ஏதாவது முறையில் மறைக்கவோ அல்லது சுவர் எழுப்பியோ தடை செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.