
வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரதீப் குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.