ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கான பகுதியில் ஜஸ்வந்த் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களான சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் தங்கியுள்ளார். இவர்கள் விளாபாகத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் 3 செல்போன்களை வைத்துவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது மூன்று செல்போன்களையும் மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜஸ்வந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆற்காடு நல்ல தண்ணீர் குல தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.