மத்தியபிரதேஷ் மாநிலம் கோபாலில் உள்ள விமான நிலையம் மற்றும் VIP சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 2 பெண்கள் மது போதையில் காரின் திறந்த ஜன்னலில் அமர்ந்து சென்றுள்ளனர். அந்த காரை மற்றொருவர் அதிவேகமாக ஓட்டியுள்ளார். இந்த 2 பெண்களும் இரு ஜன்னல்களில் அமர்ந்து, காரில் ஒலித்த இசைக்கு நடனமாடிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை பின்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காரில் உள்ள நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.