விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் கலைமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கலைமதி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.