அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை திட்டுகிறாய்? என ராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜா சத்யாவை மீண்டும் தகாத வார்த்தை திட்டி தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த சத்யா ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.