திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தச்சநல்லூரை சேர்ந்த ராகேஷ்(20) என்பதும், போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ராகேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.