
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் படத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காற்றாலையில் டவர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் குமாரபுரம் நான்கு வழி சாலை தேவ சகாயம் மவுண்ட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் படுதாயமடைந்த லட்சுமணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.