கடலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கல்பட்டி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி ஸ்ரீதர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஸ்ரீதருக்கு 2000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.