திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் சக்தி கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சக்தி கனியின் இளைய மகன் தினேஷ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த போலீசார் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி அவரை அழைத்து சென்றனர். அதன்பிறகு போலீசார் தாக்கியதில் தினேஷ் காயமடைந்தார்.

இதனால் சக்தி கனி தனது மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு போலீசார் மீண்டும் தினேஷ காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்வதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்தி கனி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். முன்னதாக போலீசார் தன்னை தாக்கியதாக தினேஷ் வீடியோ வெளியிட்டார். ஆனால் தற்போது போலீசார் தன்னை தாக்கவில்லை எனவும் தனது அண்ணனின் நண்பர்கள் சொல்லிக் கொடுத்ததை தான் கூறியதாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். என்ன நடந்தது என்பது போலீசார் விசாரணையில் தான் தெரிய வரும்.