நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவை மாவட்டத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி தனது வீட்டிற்கு அவர் வந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வேலகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு சஞ்சய் மது குடிக்க சென்றுள்ளார். பின்னர் மது குடித்துவிட்டு வெளியே வந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சயின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதல் விவகாரத்தில் சஞ்சய் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.