
உத்திரபிரதேசம் மண்டலத்தில் உள்ள லக்னோ சித்தார்த் நகரில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். அமித் வேலைக்கு செல்வதாக நம்பி ஜோதி திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அமித்திற்கு வேலை இல்லை என்பது தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இருவருக்கும் தேவையான செலவு பணத்தை அமித்தின் தந்தை சந்தோஷ் கொடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு ஜோதி தனது மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரோ அமித்தை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அமித்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு உள்ளே வெளி நபர் வந்ததற்கான தடயம் எதுவும் இல்லை. இதனால் போலீசார் ஜோதிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. என்னவென்றால் அமித் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி இருந்துள்ளார்.
குடும்பத்தின் சேமிப்பு, ஜோதியின் நகை என அனைத்தையும் விற்று சூதாட்டம் விளையாடி உள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது மனைவியின் மாங்கல்யத்தையும் கேட்டு சண்டை போட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் கோபத்தில் ஜோதி தனது கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.