இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு சில்லரை விற்பனை கடையில் ஒரு காதல் ஜோடி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 நபர்கள் கடையின் உரிமையாளரிடம் மிகவும் பழக்கம் உள்ளவர்கள் போன்று கை அசைத்துக் கொண்டே உள்ளே வந்தனர். இந்நிலையில் அந்த இளைஞர்களில் ஒருவர் நின்று கொண்டிருந்த பெண்ணின் இடுப்பில் தொட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தன் காதலரிடம் இதைப் பற்றி கூறிய நிலையில் உடனே காதலர் அந்த இளைஞரை கன்னத்தில் அடித்தார்.

அந்த சத்தம் கடை முழுவதும் எதிரொலித்த நிலையில் அருகில் இருந்த நண்பர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் அதிர்ச்சியில் நின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் “நீதியின் அறை” என்று பதிவிட்டு இருந்தார். இன்னொருவர் “இதுதான் உண்மையான காதல் பாதுகாப்பு” என்று பாராட்டியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பெண்கள் மீதான தவறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது தைரியமாக எதிர்க்கும் காதலரின் செயல் சமுதாயத்தில் நல்ல உதாரணமாக காணப்படுகிறது.