
சென்னை பூந்தமல்லியில் எல்.ஐ.சி. ஊழியரான வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது. டிரேடிங்கில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்த வினோத், தொடர்ந்து தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்தார். இது அவருக்கான மன அழுத்தத்தை அதிகரித்ததாக தெரிகிறது. முதலீடு செய்த பணம் அதிகரிக்கவில்லை; வினோத் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ரூ.1 கோடி வரை கடன் வாங்கியுள்ளார்.
சொந்த சொத்துகளை விற்று கடன்களை அடைக்க முயற்சித்தும், சில கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கி தவித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.